Welcome to

Dr. A.P.J. Abdul Kalam Educational & Social Welfare Trust​

இந்தியா இன்று அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் உட்கட்டமைப்பு போன்ற பல துறைகளில் வேகமாக வளர்ந்து வருகிறது. ஆனால் இந்த முன்னேற்றத்தின் பின்னிலும், ஏழ்மை, சமத்துவமின்மை மற்றும் கல்விக்கான அணுகல் பற்றாக்குறை போன்ற கடுமையான உண்மைகள் மறைந்தே உள்ளன — குறிப்பாக பெண்கள் மற்றும் பிற புறக்கணிக்கப்பட்ட சமூகத்தினருக்கிடையே. கல்விக்கான உரிமை சட்டம் இருந்தாலும், இன்னும் பலர் தங்களுக்குரிய கல்வியிலிருந்து வஞ்சிக்கப்படுகிறார்கள்.

 

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை, இந்த வேறுபாட்டை நீக்கும் நோக்கத்தில் செயல்படுகிறது. எங்களின் நோக்கம் — கல்வி வாய்ப்புகள் மூலம் புறக்கணிக்கப்பட்டோருக்கு சக்தி அளித்து, அவர்கள் கனவுகளை வளர்க்கவும், ஒவ்வொருவரும் கல்வி, வளர்ச்சி மற்றும் வெற்றிக்கான சம வாய்ப்புகளை பெறும் சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதே.

India stands at the threshold of remarkable transformation — advancing rapidly in science, technology, and infrastructure. Yet, beneath this progress lies the harsh reality of poverty, inequality, and a lack of access to quality education, especially for women and marginalized communities. While laws like the Right to Education exist, countless children and youth are still denied their basic educational rights.Dr. A.P.J. Abdul Kalam Educational & Social Welfare Trust is committed to bridging this gap. Our mission is to empower the underserved by providing educational opportunities, nurturing dreams, and building a society where every individual, regardless of background, has the chance to learn, grow, and succeed.

Vision Statement

To build an inclusive society where everyone has access to education, equal opportunity, and a dignified, self-reliant life.” எல்லோருக்கும் கல்வி, சம வாய்ப்பு, மற்றும் மரியாதையான, சுயநம்பிக்கையுடன் கூடிய வாழ்க்கையை வழங்கும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்குவது

FOUNDER MESSAGE

S. Kumaresan Dr. A.P.J. Abdul Kalam Educational and Social Welfare Trust

“Education is not just about imparting knowledge — it is the most powerful tool to transform lives. It has the power to awaken the light hidden within every child, especially those in the darkest corners of society.This trust was born out of a dream — a dream to ensure that the light of education reaches not just the privileged, but every child in every rural and backward area.Our mission is to build an equitable society, where education breaks the boundaries of wealth, caste, and gender, and opens doors of opportunity for all.Inspired by the vision of Dr. A.P.J. Abdul Kalam, we strive for a vibrant Tamil Nadu and a rising India — empowered through education, driven by values.Our trust is not just a support system — it is a bridge that connects dreams with reality, potential with progress, and hope with opportunity.Every small contribution, every shared vision, and every step you take with us can become a turning point in a child’s future. Let us come together to build a brighter India through the power of education.”

 

“கல்வி என்பது வெறும் அறிவு பரப்பல் மட்டுமல்ல; அது ஒரு வாழ்க்கையை மாற்றும் சக்தி. ஒவ்வொரு குழந்தையிலும் மறைந்திருக்கும் ஒளிக்கதிரை வெளிச்சமாக மாற்றும் ஒரு கருவி. நகரங்களின் ஒளிக்கீற்றுகள் மட்டும் அல்ல, கிராமங்களின் இருட்டையும் துளைத்தெழும் நம்பிக்கையின் ஒளியாக மாறிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. எங்கள் கனவு – ஒரு சமத்துவ சமூகத்தை உருவாக்குவது. கல்வி வாய்ப்புகள் செல்வம், சாதி, பாலினம் என்ற எல்லைகளைத் தாண்டி ஒவ்வொருவரையும் சென்றடைய வேண்டும்.மகான் டாக்டர் கலாம் அவர்களின் கனவுகளுக்கேற்ப, ‘உத்வேகமிக்க தமிழகம், கல்வியால் எழுச்சி பெறும் இந்தியா என்பதே எங்கள் நோக்கு.ஒவ்வொரு மாணவனும்/மாணவியும் அறிவால் நம்பிக்கையுடன் வாழவும், சமூகத்திற்கு ஒளி வீசும் பொக்கிஷமாக மாறவும் இந்த அறக்கட்டளை இடைநிலை பாலமாக இருக்கும்.உங்கள் ஒவ்வொரு ஆதரவும், ஒரு குழந்தையின் எதிர்காலமாக மாறும் என்பதை நம்புகிறேன். ஒன்றாக செயல்படுவோம், கல்வியால் இந்தியாவை மாற்றுவோம்!”